Indian 2 shooting [Image Source :file image]
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை 90 % முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், போலீஸ் வேடங்கள் போட்டிருக்கும் துணை நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், விமான நிலைய காவல் நிலையத்தில் இந்தியன் 2 படக்குழு அனுமதி பெறவில்லை என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, விமான நிலைய நிர்வாகம் மூலம் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டு சரியான அனுமதியுடன் நடைபெற்று வருவதாகவும்,விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஜிஎஸ்டி வரியுடன் ரூ.1.24 கோடி செலுத்தி அனுமதி பெற்றுள்ளதாக லைக்கா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அங்கு கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தபட்டுள்ளது. மேலும், இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…