மிரட்டும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட டீசர்.!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘சீதா ராமம்’ வெற்றிக்குப் பிறகு, துல்கர் சல்மானின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான “கிங் ஆஃப் கோதா” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் டீசரை வைத்து பார்க்கும் பொழுது, ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என்று தெளிவாக தெரிகிறது. மிரட்டும் அவதாரத்தில் சும்மா மிரட்டியுள்ளார் துல்கர் சல்மான். ஒரு கேங்ஸ்டார் திரைப்படம் போல் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter/file image]
இப்படத்தில் துல்கர் சல்மான், நடன ரோஜா, பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Twitter/file image]
ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்கின் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தினை இயக்குனராக அறிமுகமாக இருக்கும் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “கிங் ஆஃப் கோதா” டீசர் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Twitter/file image]