Jyotika [Image Source : Instagram / @Jyotika ]
சூர்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நடிகை ஜோதிகா தனது ரசிகர்களின் தொடர்ச்சி மற்றும் திரைப்பட மார்க்கெட்டை அப்படியே வைத்திருக்கும் ஒரு நடிகை என்றே கூறலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அவர் தொடர்ச்சியாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஜோதிகாவும் சூர்யாவும் சமீபத்தில் மும்பையில் ஒரு புதிய வீட்டை அமைத்து தங்கள் குழந்தைகளான தேவ் மற்றும் தியா ஆகியோரின் கல்விக்காக அங்கு சென்றார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஜோதிகா தனது கைகளில் படிக்கட்டுகளில் இறங்குவது மற்றும் சமநிலையை இழக்காமல் பந்து விளையாட்டை விளையாடுவது உள்ளிட்ட நம்பமுடியாத தலைகீழ் உடற்பயிற்சிகளையும் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக ‘காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவர் தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…