archana SAD [file image]
சென்னை : உலகத்தில் பதில் கிடைக்காத கேள்விகளில் ஒன்று பேய் என்பது இருக்கா ? இல்லையா? என்பது தான். நாம் அனைவரும் இருட்டில் எதாவது சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து அது பேய் என யோசித்து நமக்கு நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. அப்படி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அர்ச்சனா நடு இரவில் தனக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிக் பாஸ் அர்ச்சனா பொதுவாகவே மிகவும் பயம் கொண்ட ஒருவராம். எப்படி சொல்லலாம் என்றால் வீட்டில் தூங்கும்போது கடைசியாக லைட் ஆப் செய்வதற்கு கூட மிகவும் பயப்படுவாராம். ஆப் செய்துவிட்டு வேகமாக ரூமுக்கு சென்று போர்வையை போர்த்தி தூங்குவாராம். இப்படி லைட் ஆப் செய்வதற்கே பயப்படும் அர்ச்சனாவுக்கு இரவு 2 மணிக்கு அதிர்ச்சியான திகில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சீரியலில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் இரவு நேரங்களில் படப்பிடிப்புகள் நாடாகும். அப்படி தான் ஒரு முறை இரவு நேரத்தில் படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு சென்னையில் இரவு 2 மணிக்கு காரில் அர்ச்சனா சென்று கொண்டு இருந்தாராம். அப்போது சாலைக்கு பக்கத்தில் யாரோ ஒருவர் நின்று கொண்டு இருந்தது போல் இருந்ததாம். இந்த நேரத்தில் யார் இங்கு நிற்கப்போகிறார் என்ற பயத்துடன் அர்ச்சனாவும் சென்றாராம்.
அப்போது தான் அர்ச்சனாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சம்பவம் ஒன்று நடந்ததாம். அர்ச்சனா பார்த்த அந்த உருவம் காரில் அவரை பின்தொடர்ந்து வந்ததாம். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா மிகவும் வேகமாக காரை ஒட்டி சென்று வீட்டில் தான் காரை நிறுத்தினாராம். வீட்டிற்கு சென்று நான் இனிமேல் இரவு படப்பிடிப்பு போகமாட்டேன். நான் பேயை பார்த்துவிட்டேன்.
பேயை பார்த்துவிட்டேன்…பேயை பார்த்துவிட்டேன்… என்று பதட்டத்தில் பேசினாராம். அப்போது அவருடைய பெற்றோர் இல்லை நீ சரியாக தூங்கவில்லை தவறாக அப்படி நினைத்து கொண்டதால் உனக்கு அப்படி தோணுகிறது. சரியாக தூங்கி எழுந்திரு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்களாம். இந்த திகில் சம்பவத்தை பேட்டி ஒன்றில் அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.
இப்படி பயப்படும் அர்ச்சனா டிமாண்டி காலனி 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருகிறார். சீரியல்களில் நடித்து வந்த அவர் இந்த படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகம் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…