புதிய படத்தில் காதலியுடன் களமிறங்கும் தர்சன்! படத்திற்கு பெயர் இதுதானாம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தர்சன் மிகவும் அமைதியாக இருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல அவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் அவருக்கென்று தனியாக தர்சன் ஆர்மி குழுக்கள் உருவானது.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரீலீங் பக்ஸ் ப்ரொடெக்சன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவரது காதலியான சனம் ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு மேகி என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்த தகவல்களை சனம் ஷெட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டதோடு, 50 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தர்சனுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025