‘நரகமே நடுங்குது பாரு’…வசூலில் மிரட்டும் தேவாரா! 3 நாட்களில் இவ்வளவா?

தேவாரா திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 275 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

devara box office collection

சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக் கிளப்பி வருகிறது. வெளியான முதல் நாளில் தெலுங்கு பக்கம் கொஞ்சம் கவலையான விமர்சனத்தைப் பெற்று வந்தது. அதே சமயம், தமிழ் ரசிகர்களைப் படம் வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தைப் பார்க்க மக்கள் கூட்டமாகத் திரையரங்கிற்குச் சென்று வருகிறார்கள்.

இதன் காரணமாக, தெலுங்கு பக்கமும், படத்திற்குக் கவலையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், நாட்கள் ஆகத் தெலுங்கிலும் பாசிட்டிவாக விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது. படம் பார்த்த பலரும், ஜூனியர் என்டிஆர் நடிப்பு பற்றியும் படத்திற்கு இசையமைத்த அனிருத் இசை மாஸாக இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் வசூலிலும் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 170 கோடி வரை வசூல் செய்து தெலுங்கு சினிமவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து, வெளியான இரண்டு நாட்களில் 243 கோடியும் வசூல் செய்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, படம் வெளியான 3 நாட்களில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 275 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் மட்டும் 128.45 கோடியும், ஹிந்தியில் 27 கோடிகளும், கன்னடத்தில் 1 கோடியும், தமிழகத்தில் 3 கோடி எனவும், கேரளாவில் 1 கோடிவ சூலையும் நெருங்கியுள்ளது. வெளியான 3 நாட்களில் அமோக வரவேற்பு படத்துக்குக் கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும், மொத்தமாக இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. விரைவில் பட்ஜெட் தொகையை வசூலில் மீட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan
Indian Squad for NZ
Thoothukudi Perumal Temple