பொங்கல் பண்டிகைக்கு இதுவரை வெளியான தனுஷ் படங்கள்! எல்லாம் ஹிட்டு தான்…

captain miller pongal

நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அப்படி அவருடைய படங்கள் 6 முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் நிலையில், 7-வது படமாக அடுத்த ஆண்டு (2024)  பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷ் படங்கள் என்னென்ன என்பதனை பற்றி பார்க்கலாம்.

வெளியான படங்கள்

  • 2004 – ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தான் தனுஷிற்கு முதன் முதலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.
  • 2005-ஆம் ஆண்டு தனுஷ்  செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த “காதல் கொண்டேன்” படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. இந்த படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • 2009-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படம் வெளியானது. இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற்று அந்த சமயமே படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்தது என்றே கூறலாம்.
  • 2010-ஆம் ஆண்டு தனுஷிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குட்டி திரைப்படம் வெளியானது. இந்த படமும் தனுஷிற்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
  • 2011-ஆம் ஆண்டு தனுஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமாக ‘ஆடுகளம்’ படம் அமைந்தது என்றே சொல்லவேண்டும். இந்த படம் அந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.
  • 2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் ஒரு அளவுக்கு பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது.

இதுவரை தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தை சேர்க்காமல் 6 படங்கள் வெளியாகி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்திருக்கும் நிலையில், 7-வது படமாக கேப்டன் மில்லர் படம் வெளியாகும் காரணத்தால் இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெரும் என அவரும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த முறை வரும் 2024-பொங்கல் பண்டிகை மிகவும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேப்டன் மில்லர் படம் மட்டும் வெளியாகவில்லை ரஜினி சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால்சலாம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் ஆகிய படங்களும் வெளியாகிறது.

எனவே, இந்த படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுவரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷ் படங்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அவருக்கு பொங்கல் மிகவும் ராசியாக அமைந்திருக்கிறது. எனவே,  இந்த முறை அவருடைய கேப்டன் மில்லர் படம் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel
Sharon Raj Case
TVK Leader Vijay