சினிமா

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா ‘சந்திரமுகி 2’? வசூல் விவரம் இதோ!

Published by
பால முருகன்

சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

சந்திரமுகி 2

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,  லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

வரவேற்பு 

மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த “சந்திரமுகி 2 ” திரைப்படம் கடந்த செப்டம்பர்  28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் முதல் பாகம் அளவிற்கு இல்லாத காரணத்தால் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

வசூல் 

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தமாக 34 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழை போல தெலுங்கிலும் படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 28 கோடிகளும், வெளிநாடுகளில் 6 கோடி என உலகமுழுவதும் 34 கோடி வரை இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலே போட்ட பட்ஜெட்டை எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் படத்தினுடைய பட்ஜெட்டை  கூட படம் எடுக்கவில்லை.

படத்தினுடைய பட்ஜெட்டை எடுக்க இன்னும் சந்திரமுகி 2 திரைப்படம் இன்னும் 26 கோடி வரை வசூல் செய்யவேண்டி இருக்கிறது. எனவே, வரும் நாட்களில் நன்றாக வசூல் செய்து படத்தினுடைய பட்ஜெட்டை எடுக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

திமுக காரணமா? அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…

4 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

2 hours ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

2 hours ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

5 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

5 hours ago