பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

டிராகன் திரைப்படம் ரூ.37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Dragon Movie Budget

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது.

குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில், டிராகன் படத்தில் அவர் நடித்தும் முடித்துவிட்டார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன்ஒரு பகுதியாக படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த போது டிராகன்  படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது பற்றி படத்தின் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” “ஓ மை கடவுலே” படம் வெறும் 35 நாட்களில் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

அந்த பட்ஜெட்டில் என்னால் என்னால் செய்யமுடியுமோ அதே சிறப்பாக செய்தேன். மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது டிராகன் திரைப்படம் ரூ.37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னால் என்ன செய்யமுடியுமோ..நான் நினைத்தபடி எடுத்திருக்கிறேன். நான் ஒருபோதும் கூடுதல் காட்சியை எடுக்கவில்லை, எதிர்காலத்திலும் எடுக்க மாட்டேன்.

ஸ்கிரிப்ட் எழுதும் செயல்முறையிலேயே எல்லா டிரிமிங்கும் நானே செய்கிறேன். எனவே, டிராகன் படமும் எப்படி தான் நினைத்தபடி எடுத்துள்ளேன்” எனவும் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து  சிம்புவை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்