நீ லாஸ்லியாவை தானே லவ் பன்றேன்னு சொன்ன என்று பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷை நகைச்சுவையுடன் ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் பிரண்ட்ஷிப் என்று கூறப்படுகிறது.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷ் பிரண்ட்ஷிப் பட புகைப்படத்தை பகிர்ந்து என்றும் தொடரும் இந்த நட்பு,லவ் யூ ஹர்பஜன் சிங்,லாஸ்லியா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங் ,மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பன்றேன்னு சொன்ன. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா’ என்று கூறி நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகர் சதீஷ், ‘அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும். லாஸ்லியாவை ஒரு தோழியாக லவ் யூ என்று சொன்னேன்’ என நகைச்சுவையாக கூறி மறு ட்வீட் செய்துள்ளார்.தற்போது இவர்களது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…