நாய்கள் ரோட்டுல குறைகிறத பத்தி கவலைப்படாதே! மக்களை நாய் என்று திட்டிய சாக்ஷி!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆகியுள்ள வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினராகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், வனிதா, ஷெரீனையே டார்கெட் செய்து, எல்லா விஷயத்திலும் அவரை திட்டி வருகிறார். இதனால், செரீன் மனமுடைந்து அழுகிறார். இதனையடுத்து, அவருக்கு ஆறுதல் கூற சென்ற சாக்ஷி, நாய்கள் ரோட்டுல குரைத்தால் அதை நீ பொருட்படுத்துறியா என மக்களை நாய் என்று திட்டியுள்ளார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.