கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Published by
பால முருகன்

Ghilli : கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தவர் விக்ரம் தான்.

விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் என்றால் கில்லி படத்தை கூறலாம். கில்லி படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் ஆன பலர் இருக்கிறார்கள். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் ஒக்கடு. இந்த படத்தை தான் தமிழில் இயக்குனர் தரணி விஜய்யை வைத்து ரீமேக் செய்தார். தெலுங்கை போல தமிழிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

இந்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி கணேஷ், மயில்சாமி, ஆடுகளம் முருகதாஸ், கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

அந்த சமயம் 50 கோடி வசூல் செய்தது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. எனவே, படம் அந்த அளவிற்கு அருமையாக இருந்த காரணத்தால் தான் இந்த அளவிற்கு வெற்றிபெற்று இருக்கிறது. அப்படியான ரசிகர்களுக்காகவே படம் மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. எனவே, படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கில்லி படத்தில் விஜய்யை தவிர வேறு எந்த ஹீரோவாவது நடித்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்ததே விஜய் இல்லையாம். முதன் முதலாக படத்தின் கதையை விக்ரமிடம் தான் சரண் கூறினாராம். ஆனால், விக்ரம் அந்த சமயம் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்த காரணத்தால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.  அதன் பிறகு தான் படத்தின் கதையை விஜயிடம் இயக்குனர் சரண் கூறினாராம். விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தாராம்.

Recent Posts

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

2 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

3 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

3 hours ago

முக்கியமான நேரத்தில் பஞ்சாப்புக்கு பெரிய அடி? ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் மேக்ஸ்வெல்!

பஞ்சாப் :  ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…

3 hours ago

கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…

4 hours ago