leo [Imagesource : Twitter/@TrollCinema]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில், லியோ திரைப்படம் வெளியாவதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கடந்த ஒருவாரமாகவே கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் லியோ திரைப்படம் தமிழில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழக – கேரள எல்லையில் வெளியான லியோ திரைப்படம்..!
தமிழகத்தில், லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 9 மணியளவில் லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…