தளபதி 69 முதல் தங்கலான் வசூல் வரை…இன்றயை நாளின் முக்கிய சினிமா செய்திகள்!

Published by
பால முருகன்

சென்னை : தளபதி 69 முதல் தங்கலான் படத்தின் வசூல் விவரம் முதல் தகவல்கள் வெளி வந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஆக -16 இன்றைய நாளில் முக்கியான சினிமா செய்திகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தளபதி 69 அப்டேட்

விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது ” விஜயின் அடுத்த படத்தை நான் இயக்கப்போகிறேன். கண்டிப்பாக 200% விஜய் படமாக அந்த படம் இருக்கும். முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்காது. கொஞ்சம் அரசியலும் நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும்” எனவும் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி போஸ்டர்

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்று இன்று மதியம் 1.9 மணிக்கு வெளியாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, த்ரிஷா கிருஷ்ணன், ஆரவ், அர்ஜுன், பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

வாடிவாசல் பற்றி பேசிய வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் தனியார் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வாடிவாசல் பற்றி பேசியதாவது ” படத்தைச்  சீக்கிரம் ஆரம்பிப்போமென்று ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் வாடிவாசல் என்று பெயர் வைப்பதற்குப் பதில் முடி வாசல் என்று வைக்கலாம் எனப் பேசி வருகிறார்கள். விடுதலை 2 முடிந்த பிறகு கண்டிப்பாக வாடிவாசல் படம் தான் தொடங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

காதல் கிசு கிசுவில் சமந்தா

FAMILY MAN-2 வெப் சீரிஸை இயக்கி வரும்இயக்குனர் ராஜ் நித்மோரும், நடிகை சமந்தாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. ராஜ் நித்மோர் இயக்கிய FAMILY MAN-2 வெப் சீரிசில் நடித்த சமந்தா, அவர் இயக்கி வரும் சீட்டாடல் சீரிசிலும் நடித்து வருகிறார்.  படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அது காதலாக மலர்ந்தது எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் இது பற்றி சமந்தா உறுதிப்படுத்தவில்லை.

ஓடிடியில் மலை பிடிக்காத மனிதன்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலை பிடிக்காத மனிதன் படம் எதிர்பார்த்ததை விட விரைவாகவே ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. படத்தை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.

தங்கலான் வசூல் எவ்வளவு?

விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 15-ஆம் தேதி வெளியான தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்து உள்ளது. அதன்படி, படம் இந்தியாவில் மட்டும் 12 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 9 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

2 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

4 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

5 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

5 hours ago