Tamil Important Cinema News [file image]
சென்னை : ஆக 15…இன்றைய நாளில் முக்கிய சினிமா செய்திகளில், இன்று திரையில் வெளியாகும் படங்கள் முதல் ஓடிடி குறித்த புதிய அப்டேட் வரை உள்ள முக்கிய தொகுப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா, அருள் நிதி நடிப்பில் உருவான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் என மொத்தம் 3 தமிழ் திரைப்படங்கள் இன்று திரைக்கு வந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
தங்கலான் படம் இன்று திரையரங்குகளில் வெ ளியான நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையங்கிற்கு வருகை தந்த விக்ரம் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தார். அவரை பார்த்த ரசிகர்கள் சியான்…சியான் என கரகோஷமிட்டனர்.
கோட் படத்தினை பார்த்துவிட்டு விஜய் தன்னை கட்டிப்பிடித்து பாராட்டியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய சினிமா கேரியரில் இந்த படம் ரொம்ப பெரிய படம். படத்தை விஜய் சார் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து, “நீங்க சொன்னதை விட அதிகமா செய்திருக்கீங்க என்று என்னை பாராட்டினார்” என வெங்கட் பிரபு நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிரைலர் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ” ரஜினிகாந்த், சிரஞ்சீவியை சந்திக்கும் போது எனக்கு எப்படி ஒரு மரியாதை இருக்குமோ அப்படி தான் விஜய்யை சந்தித்தபோதும் இருக்கும். அவர் மீதுள்ள மரியாதை எப்போதும் மாறாதது” எனவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ராயன் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ராயன் படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…