Categories: சினிமா

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்க போறேன்! ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

Published by
பால முருகன்

கார்த்திக்  சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த திரைப்படத்தில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ், பாவா செல்லதுரை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்தை மக்கள் பலரும் பாராட்டியதோடு சினிமா இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இயக்குனர்களும் பாராட்டி இருந்தார்கள்.

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

அந்த அளவிற்கு அருமையான படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்து இருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான  க்ளின்ட் ஈஸ்ட்வுட் குறித்த காட்சிகள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். எனவே, படத்தில் அவருடைய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்தை பாருங்கள் என்று ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து கேட்டுக்கொண்டார்.

எனவே, அந்த பதிவிற்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட்  தரப்பில் இருந்து பதில் வந்து இருக்கிறது. அதில் ” ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் குறித்து  க்ளின்ட் ஈஸ்ட்வுட் கேள்விப்பட்டார். அவர் தற்போது  ( Juror 2) படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். நடித்து முடித்த பிறகு அந்த திரைப்படத்தை பார்ப்பார்” என கூறப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை க்ளின்ட் ஈஸ்ட்வுட் பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Clint Eastwood Official [file image]
தமிழில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பெரிய நடிகர் இந்த படத்தை பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. இதற்கு எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தங்களுடைய நன்றிகளையும் தெரிவித்துள்ளார்கள்.

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

34 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago