chandramukhi2 Review [File Image]
சந்திரமுகி முதல் பாகம் ரசிகர்ளுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் மற்றும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மஹிமா நம்பியார், வடிவேலு, லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, சுரேஷ் சந்திர மேனன், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை 60 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சந்திரமுகி 2 செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த பலரும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவும் 1 முறை பார்க்கலாம் என்பது போலவும் கூறி வருகிறார்கள். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் முழு விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
கதைகளைம்
படத்தின் கதைபடி ” முதல் பாகத்தில் காட்டப்பட்டு இருக்கும் அதே பங்களா இந்த இரண்டாவது பாகத்தில் வருகிறது. அந்த பங்களா நடிகர் வடிவேலுக்கு சொந்தமானதாக இருக்கிறது. அந்த பங்களாவிற்கு ராதிகா அவருடைய அண்ணன் அவருடைய மகளாக நடித்திருக்கும் லட்சுமி மேனன் ஆகியோர் வருகிறார்கள். இந்த பங்களாவிற்குள் அவர்கள் வந்ததற்கு காரணமே இவர்கள் வசித்து வந்த வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது தான்.
இதனால் சாமியார் ஒருவரை தேடி வீட்டில் அழைத்து பூஜை செய்த பிறகு அந்த சாமியார் நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு வழிபாடு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம் என கூறுகிறார். இவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை இருப்பதன் காரணமாக ஒரு ஜோதிடர் குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கு நீங்கள் சாமி வழிபாடு செய்தால் பிரச்சனை நீங்கும் என்று கூறிய காரணத்தால் சந்திரமுகி பங்களாவில் இவர்கள் தங்குகிறார்கள்.
தங்கி அதற்கு பக்கத்தில் இருக்கும் குலதெய்வ கோயிலை வழிபாடு செய்ய திட்டமிட்டு சந்திரமுகி 2 பங்காளவிற்குள் நுழைகிறார்கள். அவர்களுடன் ராதிகாவின் குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கும் ராகவா லாரன்ஸும் சேர்ந்து வந்து தங்குகிறார்.அந்த சமயம் கோவிலை சுத்தம் செய்ய சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். பின், பங்களாவில் இருக்கும் சந்திரமுகியின் ஆவி ராதிகாவின் மகளாக நடித்திருக்கும் லட்சுமிமேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.
அதன் பிறகு பல பிரச்சினைகள் பங்காளவிற்குள் நடக்கிறது. அடுத்ததாக லட்சுமி மேனன் உடம்பிற்குள் இருக்கும் சந்திரமுகி ஆத்மா எப்படி வெளியேறியது வெளியேறியதா இல்லையா இதனால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்தித்தார்கள் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் ராகவா லாரன்ஸ் எப்படி சமாளித்தார் என்பது தான் கதை.
பாசிட்டிவ்
படத்தின் பாசிட்டிவ் என்னவென்றால் வடிவேலு வரும் காட்சிகள் என்றே கூறலாம். அவர் வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதைப்போல படத்தை காப்பாற்றியது யார் என்றால் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா தான். கிட்டத்தட்ட அந்த வேடத்தில் எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு தன்னுடைய மிரட்டலான நடிப்பைகொடுத்திருப்பார் . அதைப்போல மற்றோன்று படத்தினுடைய பின்னணி இசை. பாடல்கள் சரியாக இல்லை என்றாலும் கூட பின்னணி இசை மூலம் கீரவாணி மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
நெகட்டிவ்
படத்தின் நெகட்டிவ் என்று சொல்லவேண்டும் என்றால், படத்தில் இடம்பெற்ற பாடல்கள் என்று கூறலாம். பாடல்கள் கேட்கும் படியாக இருந்தாலும் கூட படத்தில் இடையே இடையே வருவதால் ரசிகர்களுக்கு எரிச்சலை உண்டாகியுள்ளது. அதைப்போல படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் நன்றாக செய்திருக்கலாம். மற்றோன்று முதல் பாகத்தை போலவே இயக்குனர் பி.வாசு. இந்த இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ள காரணத்தால் படத்தின் காட்சிகள் அடுத்தடுத்து இது தான் என கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றபடி குடும்பத்துடன் விடுமுறையில் படத்தை பார்த்து ரசிக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு சென்று பார்க்கலாம்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…