நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என கேள்வி கேட்டார்.
அதற்க்கு பதில் அளித்த ரகுல் ப்ரீத் சிங் ” எனக்கு நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரதில் நடிக்க மிகவும் ஆசை. ஆனால், எனக்கு இதுவரை நான் விரும்பிய படி, நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரம் வரவே இல்லை. நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
வித்தியாசமான ஒரு நல்ல கதாபாத்திரங்களை நடிப்பதற்காக தேடுகிறேன். எனக்கு மிகச்சிறந்த கமர்சியல் கதையில் நடிக்கவும் வாய்ப்பு வரவேண்டும் அதுவும் என்னுடைய ஆசை தான். மொத்தத்தில் என் நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும். நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…
கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…