எனக்கு 15 வயதில் இருந்தே இந்த ஆசை இருந்தது – மாஸ்டர் பட நடிகை

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரேஸ் டிராக்கில் பைக் ஒட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு 15 வயதில் இருந்தே பைக் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது, ஆனால் பெற்றோர் அனுமதிக்கவில்லை. 18 வயது ஆன பிறகு தான் என்னையும் எனது சகோதரையும் டிரைவிங் கற்றுக்கொள்ள அனுமதித்தார்கள். நாங்கள் வசித்த பில்டிங்கில் நண்பர் ஒருவர் புல்லட் பைக் வைத்திருந்தார். என் அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக அந்த பைக் ஓட்ட பழகினேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சென்ற வருடம் ஜூனில் டெல்லி சென்றிருந்தபோது, அங்கு நண்பர்களை ரேஸ் சர்கியூட்டில் சந்தித்தேன். அப்போது நானும் ரேஸ் பைக் ஓட்டலாம் என நினைத்தேன். ஓட்டவும் செய்தேன். ஆனால் அவ்வளவு வேகமாக இல்லை. ஆனால் என்ஜாய் செய்தேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025