GOAT [file image]
கோட் : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதியை தான் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அந்த தேதியில் தான் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து முடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட பணிகள் ஒரு பக்கம் மும்மரமாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மற்றோரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி வருகிறது. படத்திற்கான டிரைலரும் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், படத்தின் முதல் காப்பியை நடிகர் விஜய் பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். படத்தினை பார்த்துவிட்டு நடிகர் விஜய் முதலில் வெங்கட் பிரபுவை கட்டிப்பிடித்தாராம். கட்டிபிடித்துவிட்டு “கலக்கிட்ட வெங்கட் பிரபு…நான் அவசரப்பட்டு சினிமாவில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டேன். இன்னொரு படம் உன்னுடன் பணியாற்றி இருக்கலாம்” என விஜய் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் கோட் படத்தை பார்த்துவிட்டு இப்படி கூறியுள்ளது இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை இன்னுமே அதிகப்படுத்தியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியான பிறகு இன்னுமே படத்திற்கு எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் இந்த திரைப்படத்தில் முடித்த கையோடு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக விஜய் அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…