the kerala story [Image source : file image ]
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில்,படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தடை செய்ய கூறி பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் ” நான் இன்னும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆனால், இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று நிறைய முயற்சிகள் நடந்துள்ளது. இந்த படத்தை வெளியீட தடை செய்ய உயர்நீதிமன்றமே மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே, நாட்டின் பொறுப்புள்ள அமைப்பான உயர்நீதிமன்றமே தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அனுமதி கொடுத்திருக்கும்போது, கண்டிப்பாக சரியான ஒன்றாக தான் இருக்கும். இப்படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தவிர வேறு யாரையும் தவறாகக் காட்டவில்லை என்று நான் நினைகிறேன். ஒருவேளை இந்தப் படத்தில் ஐஎஸ்ஐஎஸ்-ஐ குறித்து இல்லாமல் உங்களைப் பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி” என்று கட்டமாக கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…