வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?
GOAT படம் வெளியான 14-நாட்களில் வட இந்தியாவில் மட்டும் 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், வெளியான 13 நாட்களில் படத்தினுடைய பட்ஜெட்டை மொத்தமாக வசூல் செய்து தயாரிப்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்காரணமாக படம் பற்றி தினம் தினம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர்களையும் வெளியீட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படம் வட இந்தியாவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படம் வெளியான 14 நாட்களில் 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படத்தின் வட இந்தியா வெளியீட்டு உரிமையை வாங்கிய ஜீ நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத போதிலும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதன் காரணமாக இத்தனை கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மொத்தமாக 60 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வசூல் சாதனையை GOAT படம் தொடுமா என்பது சந்தேகம் தான்.
இருப்பினும், GOAT படத்திற்கு வட இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் 40 கோடிகள் வரை வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை கோடி வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025