kamal haasan - indian 2 [File Image]
இந்தியன் 2 : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியன் 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த வகையில், டிரெய்லர் இன்று (ஜூன் 25ஆம் தேதி) மாலை 7 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்திருந்தபடி, தற்போது வெளியாகியுள்ளது.
படத்திற்கான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு இந்த டிரெய்லரும் அமைந்துள்ளது. ஒன்றாம் பாகத்தில் ஜனாதிபதியாக வரும் கமல், இந்தியன் 2 விழும் அதே போல் மிரட்டியுள்ளார். இப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக படமாக்கப்பட்டுவரும் நிலையில் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…