வரும் ஜனவரி 1ஆம் தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் தொடர்ந்து தகவல் பரவி வந்தது. ஆனால், அப்படி வெளியாக வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளிவந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் பீஸ்ட். இதன் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய், பூஜா ஹெக்டே ஷூட்டிங் முடிந்துவிட்டது. மற்ற நடிகர்களை கொண்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.
டார்க் காமெடி, ஆக்சன் படமாக இந்த படம் உருவாவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர், சிவகார்த்திகேயன் பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததாகவும், பாடல் ப்ரோமோவுக்கு வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தகவல் கசிந்தது. மேலும், இந்த ப்ரோமோ வீடியோ அல்லது முதல் பாடல் ஜனவரி 1 அன்று வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால், உண்மையில், அப்படி எந்த ஒரு விடியோவும் இதுவரை எடுக்கப்படவில்லை, பாடலும் 1ஆம் தேதி வரப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் முன்னர் பாடல், ப்ரோமோ வீடியோ என எதிர்பார்த்து ஏமாறாதீர்கள் தளபதி ரசிகர்களே என சினிமாவாசிகள் கூறுகின்றனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…