‘பிக் பாஸ் தமிழ்’ ரியாலிட்டி ஷோவின் ஏழாவது சீசன் இன்னும் சில வாரங்களில் விஜய் டிவியில் தொடங்க உள்ளது. உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ், 6 சீசன்களாக ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் 7 வது சீசனில் இந்த முறை 2 வீடு இருக்கும் என நேற்று புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டு விஜய் டிவி அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 2 -வது வாரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனக்கூறப்படுகிறது. கடந்த சீசனைப் போலவே உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அந்த தகவலின்படி, விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் மகபா ஆனந்த், ஜாக்குலின், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் கோபால்சாமி, ‘இரவின் நிழல்’ பட நடிகை ரேகா நாயர், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர் பிருத்விராஜ், கோயம்புத்தூர் பேருந்து ஓட்டுநர் சர்மிளா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக இந்த சீசனில், ‘பிகில்’ பட இளம் நடிகையும் நடிகர் ரோபோ சங்கரின் மக்கள் இந்திரஜா ஷங்கரும் பங்கேற்பார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரோபோ ஷங்கரின் ஒரே மகள் சமீபத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. இந்நிலையில், குடும்ப வாழ்க்கையில் நுழையும் முன் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரபலங்களில் யார் இறுதி கட் செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…