ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!
ஹைதராபாத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த மழை நின்றுவிட்டதாக மைதானத்திலிருந்து நேரடி காட்சிகள் காட்டுகின்றன. இருப்பினும், மைதானத்தில் நிறைய தண்ணீர் தேங்கி நிற்கிறது, மேலும் நடுவர்கள் தரை ஊழியர்களுடன் உரையாடி வருகின்றனர்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கருண் நாயர், டு பிளெஸ்ஸிஸ், கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பரிதாப நிலையில் இருந்த அந்த அணியை மீட்டு ஸ்டப்ஸ் (41), அஷுதோஷ் சர்மா(41) ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஹைதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
டெல்லி அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 27 ரன்களுடன் விளையாடி வருகிறது இந்த ஆண்டில், பவர் பிளேயில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுதான். அதன்பின், சமாளித்து ஆடிய டெல்லி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இப்பொது, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நோக்கி, ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.