சினிமா

அந்த விஷயத்தை கார்த்தி தான் எனக்கு கற்று கொடுத்தார்! மனம் திறந்த தமன்னா!

Published by
பால முருகன்

நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்த படங்களுக்கு எல்லாம் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இவர்களுடைய நடிப்பில் வெளியான பையா, தோழா, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் இவர்களுடைய காதல் காட்சிகள் பலருடைய பேவரைட் ஆக இருக்கிறது. அந்த அளவிற்கு திரையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக இருக்கும்.

இந்நிலையில், சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களும் கூட. எனவே, சினிமாவை பற்றி இருவருமே மாறி மாறி பேசிக்கொள்வது உண்டு. அந்த வகையில் நட்பு காரணமாக தமன்னாவை நடிகர் கார்த்தி தன்னுடைய 25-வது படமான ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு தமன்னாவை அழைத்திருந்தார்.

அங்கு இருவரையும் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்து மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றும் கூறிவந்தார்கள். இந்த நிலையில், விழாவில் பேசிய நடிகை தமன்னா நடிகை கார்த்தி தேர்ந்து எடுத்து நடித்து வரும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்தால் புது புது கதாபாத்திரங்களை  தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நான் தமிழ் கற்றுக்கொண்டது கார்த்தியால் தான் எனக்கு அவர் தான் அவருடன் நடிக்கும்போது தமிழ் கற்றுக்கொடுத்தார். நாங்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம் அந்த படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என தமன்னா கூறினார்.

பிறகு பேசி முடிந்த பின் மேடையில் பையா படத்தில் இடம்பெற்றிருந்த ” அடடா மழைடா ” பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாடலை கேட்டவுடன் இருவரும் பையா வைபுக்கு சென்று நடனம் ஆட தொடங்கினார்கள். இதனால் அரங்கமே ஆனந்தத்தில் ஆழ்ந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago