modi manivannan and sathyaraj
சத்யராஜ் : மோடியின் பயோபிக் படத்தை மணிவண்ணன், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்கை வரலாறு படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் மோடியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்கவில்லை தன்னிடம் அந்த படம் பற்றி எந்த பேச்சுவார்தையும் நடக்கவில்லை” என்று சத்யராஜ் விளக்கம் கொடுத்து இருந்தார்.
இதனையடுத்து, விஜய் மில்டன் இயக்கத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட சத்யராஜ் மோடியின் பயோபிக் படத்தை எந்த இயக்குனர் இயக்கினால் சரியாக இருக்கும் என்பது பற்றியும் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் ” உண்மையில் மோடி பயோபிக் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை என்கிட்டே வரவே இல்லை. ஒரு வேலை மோடி பயோபிக் எடுக்கப்பட இருந்தால் என்னுடைய நண்பர் மறைந்த இயக்குனர் மணிவண்ணன் இயக்கினால் நன்றாக இருக்கும். இப்போது இருக்கும் இயக்குனர்களில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இயக்கினால் நன்றாக வரும் என்று நான் நினைக்கிறன்.
மற்றபடி, நான் கூலி படத்தில் ரஜினிகாந்த் சாருடன் நடிக்கிறேன். இன்னும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறேன். ஆனால், அந்த படங்களில் நடிப்பதை வெளியே சொல்ல கூடாது என்கிற விதிமுறை எனக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மோடியின் பயோபிக் படத்தில் நான் நடிக்கவில்லை” என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…