vetrimaaran AND vijay movie [file image]
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய உள்ளார்கள் . வெற்றிமாறன் நல்ல திரைப்படத்திற்கான கதையை விஜையிடம் கூறி விஜய்க்கும் அந்த கதை பிடித்து போக நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ அப்போது வாருங்கள் அந்த திரைப்படத்தை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை வெற்றிமாறனும் பல பேட்டிகளிலுமே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் சற்று பிசியாக இருப்பதன் காரணமாக அந்த திரைப்படம் இன்னும் நடை பெறாமல் இருக்கிறது. கண்டிப்பாக இருவரும் இணையும் அந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அந்த திரைப்படம் எப்போது உருவாகும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் சமீப காலமாக விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பிற்கு சென்று அங்கு வெற்றிமாறனை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அது விஜய் திரைப்படத்திற்காகவா அல்லது ஜெகதீஸ் தற்போது படங்களில் தயாரிக்கும் பணியிலும் இறங்கி உள்ளதால் வேறு படங்களை தயாரிப்பதால் காரணமாகவும் சந்தித்திருக்கலாம் எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஏனெனில், ஏற்கனவே வெற்றி மாறன் நீங்கள் எப்போது வேணுமென்றாலும் வரலாம் நாம் படம் பண்ணலாம் என விஜய் கூறியுள்ளார். எனவே, வெற்றிமாறன் தான் கமிட் ஆகியுள்ள படங்கள் எல்லாம் முடித்த பிறகு தான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என தெரிகிறது. வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை அவர் இயக்கவுள்ளார். அந்த படத்தை முடித்த பிறகு விஜய்யை வைத்து இயக்கம் படத்திற்கான வேலையை தொடங்கலாம் என தெரிகிறது. மேலும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…