Thug Life [File Image]
முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
முன்னதாக, இந்த திரைப்படத்திற்கு ‘KH234’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த படத்துக்கு “Thug Life” தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிடுவதற்காக க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் கமலுடன் இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று காலை கமலின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும் என்று தெளிவாக தெரிகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விக்ரம் படத்தில் நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்ததோ அதே போல் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்கள்.அந்த வகையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.
படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் இப்போது ஆரம்பம் ஆகும். இதற்கிடையில், கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…