சினிமா

என்னது குஷ்பு -பிரபு ரகசிய திருமணமா? பரபரப்பை கிளப்பிய பிரபலம்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு . இவர் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வருஷம் 16,தாலாட்டு படவா, சின்ன தம்பி, அண்ணாமலை என பல ஹிட் படங்களில் நடித்து 80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தார். ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக அந்த காலத்திலேயே நடித்துவிட்டார்.

அந்த காலத்தில் குஷ்பு நடிகர் பிரபுவுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக தர்மத்தின் தலைவன், மறவன், உத்தம ராசா, சின்ன வாத்தியார் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பொதுவாக ஒரு ஹீரோ ஹீரோயின் தொடர்ச்சியாக படங்களில் நடித்தாலே அவர்களை பற்றிய வதந்தி தகவல் பரவிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அப்படி தான் குஷ்பு நடிகர் பிரபுவுடன் தொடர்ச்சியாக படங்களில் இணைந்து நடித்த காரணத்தால் இவர்களுக்குள் அந்த சமயம் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் பரவியது. பெரிய பத்திரிகை நிறுவனமே இதனை தலைப்பு செய்தியாக எழுதியதாம். இந்த தகவலை சினிமாவை பற்றி பேசி யூடியூபில் பிரபலமான டாக்டர்  கந்தராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!

இது குறித்து பேசிய கந்தராஜ் ” குஷ்பு ஹிட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இருந்த ஆண் ரசிகர்கள் கூட்டம் போல வேறு எந்த நடிகைகளுக்கும் இருக்காது. அந்த அளவுக்கு அவருக்கு கோவிலே கட்டும் அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் வெறி பிடித்து இருந்தார்கள். நாங்கள் அந்த காலத்தில் தலைப்பு செய்திகளில் பார்த்த விஷயம் குஷ்பூ – பிரபு காதல் என்பது.

இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள் அந்த சமயம் பத்திரிகையில் காதல் என்று கூட வராது. இருவருக்கும் திருமணம் என்று தான் வரும். அப்போது இருவரும் இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகி பெரிய பிரச்னையே ஏற்பட்டது. ஆனால், அந்த சமயம் ஏற்கனவே பிரபுவுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்திற்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்  செய்திகளை பார்த்திருக்கிறேன்.

இதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி பேசவே முடியாது ஏனென்றால், இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் இருவருக்கும் குடும்பம் இருக்கிறது. நான் நானாக எந்த விஷயத்தையும் சொல்லவில்லை அந்த சமயம் இந்த மாதிரி தகவல் வந்தது இதனை தான் நான் சொன்னேன்” எனவும்  கந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago