Categories: சினிமா

ஹிந்தி தெரியாது போயா… அனல் பறக்கும் டீசர்! அதகளம் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.!

Published by
பால முருகன்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.  படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களும் வரும் காட்சிகளும் பார்ப்பதற்கு மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஹிந்தி தெரியாது போயா என டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  கயல்விழி அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

56 minutes ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

1 hour ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

1 hour ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago