சினிமா

#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்த ‘லியோ’! 12 நாள் வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Published by
பால முருகன்

லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்றதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் அறிவித்துள்ளது. 

லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லியோ”. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

வசூல்

விமர்சனங்கள் படத்திற்கு கலவையாக வந்தாலும் கூட படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் அதிகம் வசூல் செய்த சாதனை என்றும் பல சாதனைகளை படைத்தது. இன்னும் சாதனைகளை புடைத்துக்கொண்டு இரண்டாவது வாரமாக வசூலை குவித்து வருகிறது.

500 கோடியை தாண்டிய லியோ

இந்த நிலையில், லியோ திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படம் எத்தனை கோடி இதுவரை வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, லியோ படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 540  கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெற்றி விழா

லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து தயாராக இருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு உறையாற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

17 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

36 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago