GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 224 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், சுப்மன் கில் நீ ஒரு பக்கம் அதிரடியாக விளையாடு நான் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடுகிறேன் என பேசி வைத்துவிட்டு வந்ததுபோலவே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுடைய பந்துகளை விளாசினார்கள்.
இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக குஜராத் அணி பவர்பிளே ஓவர்களிலே 82 ரன்கள் எடுத்தது. அந்த சமயம் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சாய் சுதர்சன் (48) விக்கெட்டை ஜீஷான் அன்சாரி வீழ்த்தினார். அவர் ஆட்டமிழந்த பிறகாவது அதிரடி நிற்கும் என்று பார்த்தால் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது போல சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதமும் விளாசினார். அரை சதத்தை தொடர்ந்து அதிரடியுடன் சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
சதம் விளாசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக குஜராத் அணி பெரிய ரன்கள் அந்த சமயத்தில் குவித்திருந்தாலும் கொஞ்சம் தடுமாறியது. அந்த தடுமாற்றத்தில் இருந்து பட்லர் மீட்டெடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சிறிது நேரம் அவரும் நிதானமாக விளையாடி கொண்டு இருந்தார். பிறகு தனது கியரை அதிரடிக்கு மாற்றி சிக்ஸர் பவுண்டரி என விளாசவும் தொடங்கி 17-வது ஓவரில் அரைசத்தமும் விளாசினார்.
அரை சதம் விளாசியதை தொடர்ந்து பெரிய ஷார்ட் ஒன்றை அடிக்க முயன்ற அவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த ஷாருக்கான் வந்த 2வது பாலை சிக்ஸர் விளாசினார். மற்றோரு முனையில் இருந்த வாஷிங்டன் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி கூட விளாசாமல் இருந்த நிலையில், 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தெறிக்கவிட்டார்.
அதற்கு அடுத்த பந்தில் அவரும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக குஜராத் அணி அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 224 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. மேலும், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜெய்தேவ் உனத்கட் 3, பாட் கம்மின்ஸ், ஜீஷான் அன்சாரி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025