பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.!

நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் ஒரு ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை மாளவிகா மோகனன் தற்போது விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் . விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது .
இந்த நிலையில் தற்போது இவர் அமேசான் பிரேம் தயாரிக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அதிக சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?
February 16, 2025
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025