முதல் நாளே மஞ்சும்மல் பாய்ஸ் வசூலை தாண்டிய ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம்.!

Published by
கெளதம்

Aadujeevitham box office: மலையாளத்தில் மாபெரும் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் முந்தியுள்ளது.

இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Aadujeevitham Box Office [File Image]
இப்படத்தில் நடிகர் பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார். மேலும் இதில், நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்றைய தினம் உலக முழுவதும் வெளியான இப்படம் மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

ஆடுஜீவிதம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படம் ரூ. 7.45 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில், இந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என தெரிகிறது.

Aadujeevitham Box Office [File Image]

ஆடுஜீவிதம்

புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய மலையாள நாவலான ஆடுஜீவிதத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ஒருவரது நிஜ வாழ்கையின் உண்மை சம்பவத்தின் கதையாகும். படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சவூதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் ஆடு மேய்ப்பவராக அடிமைப்படுத்தப்பட்ட மலையாளி புலம்பெயர்ந்த தொழிலாளியான நஜீப்பாக நடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளில் உலக அளவில் ரூ.14 முதல் 15 கோடி வரை வசூலித்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 7.45 கோடி வசூல் செய்து மலையாள சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

Aadujeevitham Box Office [File Image]

முதல் நாள் சாதனை

ஆடுஜீவிதம் படத்துக்கு கிடத்த முதல் ஓப்பனிங், முதல் நாளில் ரூ 1.7 கோடி வசூலித்த நடிகர் டோவினோ தாமஸின் 2018-ஐ  விடவும், ரூ. 3.3 கோடி வசூலித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை காட்டிலும் சில மடங்கு அதிகமாகும்.

மஞ்சும்மல் பாய்ஸ்  தற்போது உலகளவில் ரூ 212 கோடி வசூலித்து, மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. விரைவில் ஆடுஜீவிதம் திரைப்படமும் ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

7 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

9 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

9 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

12 hours ago