சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..
சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது பழி போடுகிறார் மனோஜ்.
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது பழி போடுகிறார் மனோஜ்.
மனோஜ் ஷோரூமின் நிலை மோசமானது ;
முத்து கார் செட்டில் பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்காரு.. இப்போ மீனா வராங்க.. முத்து கிட்ட சீதாவை பொண்ணு கேட்டா விஷயத்தை சொல்லிட்டு இருக்காங்க. சீதா சின்ன பொண்ணு தானே இப்பவே எதுக்கு கல்யாணம் இப்பதானே வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கா அப்படின்னு சொல்றாரு.. மீனா சொல்றாங்க சின்ன பொண்ணு தான் ஆனா ஒரு வரன் தேடி வரும்போது அத அமைச்சு குடுக்கணும் இல்ல அப்படின்னு சொல்றாங்க. சரி ஃபர்ஸ்ட் சீதா கிட்ட இதுக்கு சம்மதமானு கேட்கலாம் அப்படின்னு சொல்றாரு.. இப்போ வீட்டுக்கு கோவத்தோட மனோஜ் வராரு என்ன மனோஜ் உனக்கு இன்னைக்கு வேலை இல்லையா அப்படின்னு விஜயா கேக்குறாங்க.. அதுக்கு மனோஜ் கோபமா கொஞ்ச நாள்ல ஷோரூமே இல்லாம போயிரும் போல எல்லாத்துக்கும் காரணம் இவன் தான்னு முத்துவை காட்றாரு .
நான் என்னடா பண்ணுனேன்னு முத்து கேட்க நீ அந்த பாடிகார்ட் அடிச்ச இல்ல அதனால அவன் ரவுடிகளை கூட்டிட்டு வந்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கேட்கிறான் பணம் இல்லைன்னு சொன்னதால பொருள் எடுத்துட்டு போயிட்டான். நீ ஏண்டா எடுக்கவுட்ட அடிச்சு தொரத்த வேண்டியதுதானே அப்படின்னு முத்து சொல்ல , அவன் போலீசுக்கு போன் பண்றேன்னு சொன்னா என்னால என்ன பண்ண முடியும்னு சின்ன பையன் மாதிரி கம்ப்ளைன்ட் பண்றாரு.. அதுக்கு நீ கரெக்டான ஆள வச்சிருக்கணும் நான் சின்னதா தட்டு தட்டுனதுக்கே அவன் விழுந்துட்டான் நீ ஒரு இளிச்சவாயன்னு அவனுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு அப்புடின்னு முத்துசொல்லுறாரு .இப்போ மனோஜ் இந்த மாசம் 50000 கொடுக்க முடியாது சொல்ல , உடனே முத்துக்கு கோவம் வந்தது மாசம் மாசம் இப்படியே ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருப்பியா அப்படின்னு கேக்குறாரு .
சீதாவிற்கு டும் டும் ஏற்பாடுகள் ;
மீனாவும் சரி விடுங்க அடுத்த மாசமே கொடுக்கட்டும்னு சொல்லுறாங்க ..ரோகினியும் அடுத்த மாசம் நாங்க சேர்த்து தரோம்னு சொல்ல அமைதியா சரி உன் மேல நம்பிக்கை இருக்கு அப்படின்னு முத்து சொல்லுறாரு . இப்போ சீதா அம்மாகிட்ட கல்யாணம் இப்ப வேண்டாம் அப்படின்னா கோவமா சொல்றாங்க.. சத்யா இப்பதான் படிச்சிட்டு இருக்கிறான் நான் இப்பதான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் இப்பவே எதுக்கு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்படின்னு சொல்றாங்க .இந்த டைம்ல முத்து மீனா வராங்க.. என்ன சீதா சத்தம் வெளியில வரைக்கும் கேக்குது.. ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற ஏதாவது லவ்வு இருக்குதா அப்படின்னு கேக்குறாரு அதெல்லாம் இல்ல மாமா.. வேலையில கொஞ்சம் நல்ல பொசிசன்ல வரலாம்னு இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கு மீனா வேலை எப்ப வேணா பாத்துக்கலாம் ஆனா நல்ல வரன் அமையுறது கஷ்டம் ஃபர்ஸ்ட் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரட்டும் பார்க்கலாம்.. அதுக்கப்புறம் செட் ஆச்சுன்னா பேசிக்கலாம் அப்படின்னு சொல்லி சீதாவை சம்மதிக்க வைக்கிறாங்க .. இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க.. முத்து சீதாவை பற்றி பெருமையா சொல்லிட்டு இருக்காரு.. இப்போ மாப்பிள போட்டோவ செல்போன்ல எடுத்து காட்றாங்க முத்து நல்லா இருக்கிறாரு அப்படின்னு சீதா கிட்டையும் காட்டுகிறாரு சீதாவும் சிரிக்கிறாங்க அதோட இன்னைக்கு எபிசோட முடுச்சுருக்காங்க ..