காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்

Mansoor Ali Khan - Bharathiraja

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த சர்ச்சை கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ” த்ரிஷா பற்றி நான் பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துள்ளது. என்னிடம் எதை பற்றியும் கேட்காமல் எப்படி கண்டன அறிக்கை விடலாம்? 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடப்பதே வேறு.

திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி உண்மையானது என்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்குத் தெரியாதா? இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா? நான் யாரையும்  குறிப்பிட்டு இதனை சொல்லவில்லை. த்ரிஷா நல்ல நடிகை இன்னும் பெரிய அளவில் வளரட்டும் என்று கூறினார். இவ்வாறு பேட்டி கொடுத்தும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.

மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து: த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த தெலுங்கு பிரபலம்.!

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள.. உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்தோடோ, அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI