Mark Antony [File Image]
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என லைகா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிறந்துள்ளது.
ஏற்கனவே, லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் ரூ.21.29 கோடி கொடுக்கப்படவேண்டி இருந்த நிலையில், அதில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, இன்னும் அந்த தொகையை விஷால் செலுத்தாத காரணத்தால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையீட்டுள்ளது.
இதன் அடிப்படையில், லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது. அது மட்டுமின்றி, உயர்நீதிமன்ற உத்தரவுகளை இன்னும் விஷால் அமல்படுத்தவில்லை என்ற காரணத்தால் வரும் செப்.12-ல் நேரில் ஆஜராகவும் உத்தரவிடபட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…