“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” – உதயநிதி ஸ்டாலின்.!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அனைத்து பரிசோதனைகளும் முடிந்த நிலையில், மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்போலோவிற்கு காரில் திரும்பினார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, அவரது உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை உதயநிதி தெரிவித்துள்ளார். ”முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறா, முதல்வர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் முதல்வர் நலமுடன் இருக்கிறார். 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.