சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, அவர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் விரைவில் தேறுவதற்கு தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தியை கேட்ட உடன், விசிக தலைவர் திருமாவளவன், முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்பொழுது, மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், […]
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் “மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என தெரிவித்திருந்தார். இவர் இப்படி பேசியிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் […]
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அமலாக்கத்துறை ரெய்டுக்கு அஞ்சியே 3 ஆண்டுகளாக புறக்கணித்து வந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க டெல்லி சென்றதாக இபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், ‘ஈடி அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது’ என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இன்று தமிழ்நாட்டில் […]
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் உழைப்பாளர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன் பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” மே 1ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். உழைக்கும் பலரும் தொழிலாளர்கள் தான். மிட்டா மிராசுதாரர்களின் வாழ்க்கையை உருவாக்கி தருபவரும் […]
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், […]
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய தினம் கோவையில் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளனர். அட ஆமாங்க ஒரு பக்கம், தவெக தலைவர் விஜய் கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன. அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டவை, பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், […]
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று எரிசக்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நான் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சென்னை : கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தான் அரசியல் செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கை மீதான தமிழக அரசின் […]
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார். மாநாட்டின் […]
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out மோடி என்று தான் சொல்வோம் என மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக ஒரு கூட்டத்தில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Get Out மோடி : […]
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.க தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமாவளவன் எம்.பி.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ” தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாடு அரசையும் மிரட்டி ஒருபோதும் பணிய வைக்க முடியாது. தமிழர்கள் நாம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள், […]
சென்னை : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சியில், “புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்கப்படும்” என்றும், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?” எனவும் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனையடுத்து, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் சமீபத்தில் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில், திமுக அமைச்சர் பி.கே. சேகர் […]
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அந்த நபர் ஈடுபட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவலை கொடுத்து அஜய்யை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்து வருவதே ஓயாத சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், […]
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி.க்கள் பங்கேற்றனர். நாளை மறுநாள் (பிப்ரவரி […]
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் மகிழ்திருமேனி சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விஜய்க்கு சொன்ன கதை பற்றியும் விஜய்யுடன் அவர் இணைந்து பணியாற்ற […]
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரதான கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். மொத்தம் 55 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாதக வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக […]
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை […]