சினிமா

எம்.ஜி.ஆர் தான் எனக்கு முக்கியம்! இந்தி பட வாய்ப்புகளை உதறி தள்ளிய நடிகை லதா!

Published by
பால முருகன்

நடிகர் எம்.ஜி.ஆர்  உடன் பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருப்பார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகை லதாவை கூறலாம். அந்த காலத்தில் எல்லாம் நடிகை லாத எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், பல்லாண்டு வாழ்த்து, உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படங்கள் வெறியடைவதன் காரணமாகவே எம்.ஜி. ஆர் அடுத்ததடுத்த படங்களில் லதாவை நடிக்க வைக்க முடிவு செய்து வாய்ப்புகளை கொடுத்தார்.

கொடுத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்திக்கொண்ட லதா நன்றாக நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார். அது மட்டுமன்றி அந்த சமயம் அவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், எம்ஜிஆர் படங்களில் அந்த சமயம் நடிக்க கமிட் ஆகி இருந்த காரணத்தால் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

MGR Nagaril : வயிறு குலுங்க நகைச்சுவை இருந்தும் தோல்வியான ‘எம்ஜிஆர் நகரில்’! காரணம் என்ன தெரியுமா?

அந்த சமயம் இந்தியில் ரிஷி கபூர் மிகவும் பிரபலமான நடிகர் அவருடன் நடிக்கவேண்டும் என்று அந்த சமயம் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால், நடிகை லதாவுக்கு தானே இந்தி படத்தில் ரிஷி கபூருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், அந்த சமயம் தான் லதா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம்.

எனவே எம்.ஜி.ஆர் படம் தான் தனக்கு முக்கியம் என கூறி அந்த இந்தி திரைப்படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம். அது மட்டுமின்றி சிவாஜி, ரஜினி ஆகியோருடன் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்ததாம்.  அந்த சமயம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து வந்த காரணத்தால் அவர்களுடன் நடிக்கவும் லதா மறுத்துவிட்டாராம். இந்த தகவலை நடிகை லதா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

45 minutes ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

2 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

2 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

5 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

5 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

5 hours ago