பர்பாமன்ஸ் சிறப்பு..அனிருத் மிரட்டல்! கிங்டம் படம் எப்படி இருக்கு?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Kingdom Review

சென்னை : பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘கிங்டம்’. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் (எக்ஸ்) தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்ற பார்ப்போம்.

படத்தினை பார்த்த ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “படத்தின் முதல் பாதி மிகவும் அருமையாக இருந்தது இரண்டாவது பாதி சுமாராக இருந்தது. இயக்குனர் கவுதம் தின்னனுரி ஒரு நல்ல ஸ்கிரிப்ட்டை உருவாக்கினார், முதல் பாதி முழுவதும் திரைக்கதை மற்றும் உணர்ச்சிபூர்வமான தொடர்பு சிறப்பாக இருந்தது. விஜய் தேவரகொண்டா சூப்பர். சத்யதேவ் & வெங்கடேஷ் நல்ல ஸ்கோப் வைத்திருந்தார்கள் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை மிகவும் அருமையாக இருந்தது” எனவும் தெரிவித்தார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால் அனிருத் இசை படத்தில் அருமையாக இருக்கிறது. இந்த விஷயத்தை தான் பலரும் சொல்கிறார்கள். அடுத்த வாரம் கூலி படத்துடன் வருகிறார் அந்த படத்தில் அவருடைய இசை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்தார்.

படத்தை பார்த்த மற்றொருவர் ” ஒரு அற்புதமான, ஒருபோதும் தவறவிடக்கூடாத படம். அந்த அளவுக்கு சிறந்த இசை, சிறந்த கதை, சிறந்த திருப்பங்கள், சிறந்த அதிரடி, சிறந்த நடிகர்கள், ஒவ்வொரு இதயத்தையும் தொடும் சிறந்த காட்சியமைப்பு ஆகியவற்றிற்காக படத்தை நிச்சயமாக பார்க்கலாம்” என கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றொருவர் “படத்தின் முதல் பாதி அருமையாக இருக்கிறது, அனிருத்தின் இசையும் விஜய்யின் திரைப் பிரசன்ஸும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றின. மொத்தத்தில் படம் நன்றாக இருக்கிறது” எனவும் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்