நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில் ஆகும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இந்தபடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று இரவு 7.30 மணிக்கு அறிவிப்பு ஓன்று வெளியாகும் என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.இதனால் படத்தின் புதிய அப்டேட்டுக்கு காத்திருந்த தளபதி விஜய் ரசிகர்களுக்கு புதிய விருந்து கிடைத்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…