நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது விதி. தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் தற்போது ட்விட்டரில் ஒரு அரசியல் கட்சிக்கு அதரவாக பேசிவருகிறார். அதனால் பலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் இப்படி தொடர்ந்து நடந்தால் தான் ட்விட்டரில் இருந்து வெளியேறுவேன் என்றும் […]
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் படங்களையும் அந்தரங்க உரையாடல்களையும் வெளியிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சையில் நடிகர் ராணாவின் தம்பி அபிராம், டைரக்டர் சேகர் கம்முலு, எழுத்தாளரும் டைரக்டருமான கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, தயாரிப்பாளர்கள் வெங்கட அப்பாராவ் ஆகியோர் சிக்கி உள்ளதால் அடுத்து யார் பெயரை வெளியிடுவாரோ என்று பலரும் […]
தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர். இப்போது முக்கிய பிரச்சனையாக பேசப்படுவது காவிரி விவகாரம் தான். எப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பது தெரியவில்லை, ஆனால் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஏன் காவிரி விவகாரத்திற்கு குரல் கொடுக்கவில்லை என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், என்னுடைய வார்த்தையால் உடனே அந்த விஷயம் நடக்கும் என்றால் அதை முதல் ஆளாக செய்வது நான்தான். நான் சொன்னால் உடனே காவிரி […]
இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை கார்னர் செய்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும். கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல்சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது […]
ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. ‘2.0’ படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எனவே இப்போது அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது கட்சி தொடங்கும் எண்ணம் ரஜினியிடம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனவே விரைவில் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் போலீசாருக்கு ஆதரவாக ரஜினி கருத்து வெளியிட்டதற்கு […]
பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரீனா அகர்வால். இவர் சமீபத்தில் Kya Haal Mister Panchal என்ற சீரியலுக்காக நாய் வைத்து படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். திடீரென்று அந்த நாய் அவரின் முகத்தை மோசமாக கடித்துள்ளது. இதனால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரீனாவிற்கு முகத்தில் சில தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மருத்துவர்கள் அவரை ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்க கூறியுள்ளனர்.
பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இளம் பெண்களை மிரட்டி தன் கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை சந்தியா கூறினார். இந்த விவகாரம் பற்றி பதிலடி கொடுத்துள்ள ஜீவிதா அந்த தொலைக்காட்சி மற்றும் நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் ஸ்ரீரெட்டியின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீரெட்டி “sexy mood 24×7” என கூறுகிறார். “இந்த விடீயோவை பார்த்த பிறகு.. இவரை ஏமாற்றிவிட்டார்கள் […]
காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு […]
நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்கள் பாலியில் தொல்லை கொடுக்கிறார்கள், அதற்க்கான ஆதாரங்களை வெளியீட்டு கதிகலங்க வைத்தார். இதனிடையே தேசிய மனித உரிமை ஆணையம் கூட இதை பற்றி விளக்கம்தருமாறு தெலுங்கு திரையுலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் நேரலை கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி தமிழ் மக்களை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், ஹாட்ஸ் ஆப் டு தமிழ் மக்கள் , அவர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் மரியாதை, எந்த […]
தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார். முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட […]
குணச்சித்திர நடிகர்கள் என்பது மிகவும் குறைவு. அப்படி இருந்தாலும் நீண்ட நாட்கள் நிலைத்து இருப்பது கடினம். நாசர், பிரகாஷ்ராஜ் என ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் வரிசையில் நடிகர் லிவிங்ஸ்டன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர், இவர் சமீபத்தில் வந்த மகளிர் மட்டும் படத்தில் கூட கலக்கியிருப்பார். இந்நிலையில் இவர் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அதில் முதன் முறையாக […]
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா?’ என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் இளைஞர்களின் கவனம் திசைதிரும்பிவிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. தீவிர எதிர்ப்புக்குப் பின்னர், ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஐபிஎல் போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் […]
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி,சிறுமி ஆசிஃபா விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது தகும் என்று ஆதங்கம் தெரிவித்தார். திரைப்பட சண்டைக் கலைஞர் கள் சங்கத்தின் 51-வது ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். விஜய் சேது பதி ரத்த தானம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட ஆசிஃபாவை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக […]
திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் , சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முடிவுக்கு வந்துள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரைப்படம் வெளியிடுவதற்காக கியூப் நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் 42 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜு, கே.சி.வீரமணி முன்னிலையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், […]
தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம், தமிழக அரசுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், மார்ச் 16 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. முதலில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு […]
நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் ரசிகர்களுக்கும் முத்த பரிசை அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முத்தமிடும் புகைப்படமும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இவரை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 லட்சம் மட்டுமே. இதனிடையே ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகிறது. தந்தை ராமராவ் வேடத்தில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து […]
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவையும் மீறி தான் நடித்த மாத்திரை விளம்பரம் ஒளிபரப்பப்படுவதாக சமையல் மந்திரம் நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யா புகார் அளித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த திவ்யா, சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது, பாலியல் சக்தியை அதிகரிக்கும் மாத்திரை தொடர்பான விளம்பரத்தில் நடித்ததாகவும், 3 மாதம் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்பப்படும் கூறி விட்டு, 2 ஆண்டுகளாக ஒளிபரப்புவதாக கூறியுள்ளார். விளம்பரத்தை தடை செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, […]
திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் நடிகைகள் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு குடும்பம், குழந்தை, குட்டி என்று கணவரோடு செட்டில் ஆகி விடுவார்கள். விதி விலக்காக சில நடிகைகள் மட்டுமே திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடிப்பார்கள். அப்படி நடித்தால் கூட கதாநாயகி கேரக்டரில் கவர்ச்சியாக நடிக்காமல், அக்கா, அண்ணி, அம்மா என மற்ற குணச்சித்திர கேரக்டர்களில் நடிப்பார்கள். கணவர் போடுகிற கட்டுப்பாடுகள் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இப்படிப்பட்ட நடிகைகளுக்கு “நான் எப்படி நடித்தாலும் என் கணவர் ஒன்றும் […]
நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறும் நடிகை ஸ்ரீரெட்டி, அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும் என கருத்து கூறியிருந்தார். […]