கெட்டவன், மோசமானவன், அடங்காதவன் என்றாலே சிம்பு தான்.சிம்புவைப் பற்றிப் பேசினாலே பொதுவான ரசிகர்கள் கூட கடுப்பாவதும் வாடிக்கை.இதற்கெல்லாம் சிம்புதான் காரணம் என்பதும் உண்மைதான். இந்நிலையில் சிம்புவே நெகிழ்ந்து போய் அழும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிம்புவிற்கு ரசிகர்கள் பலத்த கைத்தட்டல்களையும் எஸ்டிஆர் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர். இதைப் பார்த்த சிம்பு நெகிழ்ச்சியில் அழுதேவிட்டார். “எப்போதுமே என்னைப் பத்தி நிறைய தப்பாவே கேட்டுட்டேன். […]
நடிகர் விஜய் சேதுபதி நல்ல நடிகர் மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட. மிகவும் சாதரணமாக எல்லோரிடத்திலும் பழகக்கூடியவர். தன்னை மிக பெரிய நடிகர் என்ற கர்வத்தை எங்குமே வெளிபடுத்தமாட்டார் , சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஒருவரை கேள்வி கேட்க, வேண்டும் என்றால். யாரை? என்ன கேட்பீர்கள்?’ என கேட்டபோது. அதற்கு நடிகர் விஜய் சேதுபதி ‘நிறைய பேர் உள்ளனர், அவர்கள் பலரும் மிகவும் வயதானவர்கள், இந்த வயதிலும் மக்களுக்கு நல்லது செய்யாமல் பணத்தின் பின்னாடி ஓடுபவர்கள் என […]
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படம் பலவித தடைகளை தாண்டி ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பின் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெகுவிரைவில் உலக நாயகன் டியூப் என்ற தளத்தில் வெளிவரவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரஜினியின் ‘காலா’ […]
கியூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள் திரைப்படங்களை திரையரங்குகளில் டிஜிட்டல் மற்றும் முப்பரிமான முறையில் ஒளிபரப்பு செய்ய அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கமும், டிஜிட்டல் நிறுவனங்களும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகவில்லை. எனவே தமிழகத்தில் பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் கூட இல்லாமல் ரிலீஸ் ஆன படங்களே […]
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ரசிகை ஒருவர், அவரின் சொத்துக்களை தமக்கு உயிலாக எழுதி வைத்ததை கண்டு, நெகிழ்ந்து போனதாக கூறியுள்ளார். மும்பையில் வசித்த 62 வயதான நிஷி திரிபாதி என்பவர், கடந்த ஜனவரியில் உயிரிழந்தார். நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையான இவர், தமது வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை சஞ்சய் தத்தின் பெயரில் உயில் எழுதி வைத்தது தெரியவந்தது. ஆனால், சொத்துக்கள் மதிப்பு வெளிவரவில்லை. இந்த தகவலை அறிந்த சஞ்சய் தத், ரசிகையின் […]
“பிட்சா” பட புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் சைலன்ட் த்ரில்லர் மூவி தான் “மெர்குரி” ஆகும். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். மேலும் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னதாகவே ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை […]
விசுவாசம் என்ற படத்தில் அஜித் இப்போது சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தொடர்ந்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத்தின் கதையை கேட்டு தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போடா போடி இயக்குனர் விக்னேஷ்சிவன் -தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் காதலர்கள் என்பதை நான் அனைவரும் அறிந்ததே இந்நிலையில் காதலர்களான இருவரும் அமெரிக்காவில் சென்று பொழுதை கழித்து கொண்டாடினர் தற்போது புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். டோரா,அறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அறம் படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி, ஒன்றாம் தேதி முதல் படதயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பல புதிய படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாங்கள் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சுமூக உடன்படிக்கை ஏற்படாததால், நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என கூறியுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி, பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரத்ததான முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, வருங்கால சந்ததியினருக்கு பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டும் என்றும், வீட்டில் கணவர் அடித்தால் மனைவியும் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் […]
தல அஜித்தும் சிறுத்தை சிவாவும் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இப்படத்திற்காக தல கருப்பு நிற ஹேர் ஸ்டைல்க்கு மாறபோவதாக தெரிகிறது. அண்மையில் நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஒரு ரசிகருடன் போட்டோ எடுத்தது வைரலாகி வருகிறது. இதில் உடல் மெலிந்து தாடி அதிகமாக வைத்து காணபடுகிறார். படத்திற்கான புது லுக் என […]
வரலட்சுமி சரத்குமார் தளபதி விஜயின் 62 வது படத்தில் முதன் முதலாக ‘இளைய தளபதி விஜயுடன்’ மிக முக்கியத்துவம்வாய்ந்த கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது … https://twitter.com/sunpictures/status/970607365518082049 .@varusarath will be acting for the first time in Thalapathy Vijay’s Movie. #Thalapathy62WithSunPictures — Sun Pictures (@sunpictures) March 5, 2018 இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமி சரத்குமார் இது இன்ப அதிர்ச்சி தரக்கூடிய […]
நடிகை கஸ்தூரி சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வெள்ளம்புத்தூர் எனும் கிராமத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி சிறுவனை அடித்து கொலை செய்ததோடு, தாயை அடித்து துன்புறுத்தி சிறுமியை மர்ம கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்க பதிவில் ஒரு குறிப்பட்ட சமூகத்தை நேரடியாக குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். இந்த நிலையில் […]
நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் 2.O டிசர் திருட்டுத்தனமாக வெளியானதுபற்றித்தான் பேச்சு. ஏனெனில் இது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம். இப்படத்தின் பட்ஜெட் சுமார் நானூறு கோடி ரூபாய். இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்படத்தின் VFX பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் எப்போ வரும் என்று படத்தில் நடித்தவர்களுக்கே சரியாய் தெரியவில்லை. இந்நிலையில் இதன் டீசர் என்று […]
பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதையடுத்து, தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் இன்று அறிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த ஜேம்ஸ்பாண்ட் முன்னால் நாயகன் ‘ரோஜர் மூர்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய திரைப்பட கலைஞர்கள் நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது. சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது. பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் […]
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம் வெல்ல நடந்த சதியை மையமாக வைத்து அமரிக்காவின் பிரையன் ஃபோகல் இயக்கிய ‘இகாரஸ்’ என்ற திரைப்படம் சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. அதே போல் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை ‘ஃபான்டம் த்ரட்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றியமைக்காக மார்க் பிரிட்ஜஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சிகை அலங்காரம்-பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் வாழ்க்கை தழுவி எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படமான டார்க்கஸ்ட் ஹவர் என்னும் படத்தில் பணியாற்றிய 3 பேருக்கு சிறந்த சிகை அலங்கார விருது தேர்வு செய்யப்பட்டனர். டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக், கஷூஹிரோ சுஜி ஆகியோருக்கு சிறந்த மேக்கப்-க்கான விருது வழங்கப்பட்டது
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இவ்விழாவில் சிறந்த துணை நடிகராக அமெரிக்க நடிகர் சாம் ராக்வெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசௌரி’ என்னும் படத்தில் துணை நடிகராக நடித்தற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2002ல் சிறந்த நடிகருக்கான ஃபீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது, 2003ல் சிறந்த நடிகருக்கான சில்வர் பியர் விருது, துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது – மோஷன் […]