ஜிவ் மேனன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாள மயம் ஒன்று. இப்படத்தில் ஜி.வி விஜய் ரசிகராக நடிப்பதாக தெரியவந்துள்ளது. இப்படத்தில் எடுக்கப்பட்ட பாடலின் போது கட்அவுட்டில் விஜய்க்கு வைக்கப்பட்டபோஸ்டரில் ஜி.வி. பிரகாஷ் இடம்பெற்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் இன்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, அவரது கணவர் போனிகபூர் மற்றும் மகள்கள் இருவர் மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளனர். திரையுலகைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய இரங்கல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கடந்த மாதம் 24ம் தேதி துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் அஞ்சலிக்குப் பின், அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தனுஷின் மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் மான ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கனவே மனைவி, அம்மா, இயக்குனர், என குடும்பம், தொழில் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று ஐநா சபையில் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார். கடந்த ஆண்டு மகளிர் தினத்தை […]
உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இத்தனை நாட்களாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இன்று முதல் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர். வரும் 13ஆம் தேதியும் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் . இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோரும் […]
ரஜினிகாந்த் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். என்னால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், தூய்மையான அரசியல் என்றால்ஆன்மீக அரசியல் என்று சமீபத்தில் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளதை பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது”ரஜினிகாந்த் மலையேறிவிட்டார் என்று பதில்கூறினார்
பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா . சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர். இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக இருப்பதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளனர். அடுத்து ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம். ஆனால் நடுவில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேலைகளில் […]
நடிகை ஜெயப்பிரதா பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார். நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாதிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்தைப் பார்த்தது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் பத்மாவத் படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் ஆசம்கான் தனக்கு அளித்த தொல்லைகள் அத்தகையவை என்றும் […]
போனி கபூர் குடும்பம் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாகச் சில முக்கியமான தகவல்களை வெளியிடப்போவதாக ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2 வாரங்கள் ஆன பின்னரும் அதுபற்றிப் பேசாமல் அவர் தொடர்ந்து அமைதி காக்கிறார். இதற்குக் காரணம் சென்னையில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான பங்களா உள்ளிட்ட சொத்துக்களை ஸ்ரீலதாவுக்குக் கொடுப்பதாகக் கபூர் குடும்பம் உறுதி அளித்திருப்பதாகவும், அதனால் எதுவும் பேசாமல் அமைதி காக்க […]
சின்ன தல சிம்பு என்றாலே பிரச்சனை தான் என்ற வகையில் பேசப்படுகிறது. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் ரசிகர்கள் சிம்புவுக்கு ஆதரவாகவே உள்ளனர் . சிம்புவை கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பீப் பாடல் வெளியாகிய காரணத்தினால் கைது செய்ய வேண்டும் என்ற வகையில் நிறைய பேர் போராடினர். அனால் இதுவரை யார் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஒரு பேட்டியில் டி.ஆரிடம் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு அவர், பணத்திற்கு தவறு […]
பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் ரகசியமாகவே இருந்தது. தற்போது பிரபாஸ் சர்வேதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது. இப்படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸ் ல் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். பிரபாஸ் எப்படி […]
பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு அவரை பற்றிய நிறைய செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா மட்டுமின்றி சொந்த வாழ்க்கை விஷயங்களும் வெளிவருகின்றது . ஸ்ரீதேவியை ,போனி கபூர், திருமணம் செய்து கொண்ட பின் அவரது முதல் மனைவி மகன் மற்றும் மகள் இருவரும் போனி கபூரை விட்டு பிரிந்திருந்தனர். தற்போது ஸ்ரீதேவி மறைவிற்கு பின் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மீண்டும் தன்னுடைய தந்தையுடனேயே ஒரே வீட்டில் இருக்க முடிவு செய்திருக்கிறாராம். அவர் ஸ்ரீதேவி […]
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் , அஸ்வினி கொலையில் திரைப்படங்களுக்கும் பொறுப்பு உண்டு’ என தெரிவித்துள்ளார். கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலி, அஸ்வினி என்ற மாணவி தன்னுடைய முன்னாள் காதலர் அழகேசனால் நேற்று கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, திரைப்படங்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். “ஸ்வாதி, சித்ராதேவி, அஸ்வினி… இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்களை காவு கொடுக்கப் போகிறோம்? காதல் என்ற […]
பிரபல நடிகை மௌமிதா சஹா பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்தவர் . கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அங்கு பக்கத்தில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்து போலீசாரிடம் கூறினார் .அங்கு விரைந்து வந்த போலீஸ் கதவை உடைத்து உடலை மீட்டுள்ளனர். அவர் தூக்கிட்ட இடத்தின் அருகே ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனஅழுத்த காரணத்தினால் தான் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது […]
பார்வதி தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் சிறிந்த நடிகை என பெயரேடுதுள்ளர். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் நடிக்க வர மாட்டேன் என கூறினார். தற்போது ஒரு பத்திரிகையாளர் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டபோது . பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை. ஒல்லி நடிகருடன் […]
ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்று கேள்வி எழுப்பிவந்த ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் அரசியலுக்கு வருவேன் என்று பதில் அளித்தபின்னர் அவர் சமுகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார் ஒக்கி புயல் முதல் உஷா ,அஷ்வினி படுகொலை வரை அவர் மௌனம் களைய வில்லை .ரசிகர்களை பார்ப்பது அடுத்த கட்ட அரசியல் பற்றி பேசுவது சிலையை திறந்து வைப்பது என அரசியல் வேலையாக செய்து வருகிறார். இன்று காலை ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பத்திரிக்கையாளர்கள் ஏர்போர்ட்டில் […]
கடற்கரையில் சேலை தான் அணிந்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றார்களா ? என சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்த நபர்களுக்கு நடிகை ராதிகா ஆப்தே கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றபோது, கடற்கரையில் பிகினி உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டனர். இந்நிலையில் […]
சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 16-ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்கக் கோரியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடவில்லை. மேலும், 8% கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்யக் கோரி திரையரங்கு உரிமையாளர்கள் வரும் 16-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் […]
தல அஜித் தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி தன்னுடன் பணிபுரியும் அனைவர் மீதும் அதிக அக்கறை கொண்டவர். அதை பல வளர்ந்து வரும் பிரபலங்கள் கூறுகையில் நாம் கேட்டிருக்கிறோம். தமிழக மக்களின் அமோக வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் நடித்த சுஹாசினி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், நடிகர் அஜித் அவர்களுடன் 5 நாள் பரமசிவன் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்தின் போது அஜித் அந்த அளவிற்கு பிரபலம் இல்லை, இப்போது இருப்பது போல். ஆனால் […]
பல முன்னணி நடிகர்களுக்கு தமிழ்நாட்டை மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதைபோல் விஜய்யை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு, கேரளா என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மலையாள தொலைகாட்சியில் விஜய் படங்கள் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் தவறாக விமர்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் உள்ளனர் .