திருமணம் செய்வதாக கூறி இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் பலகோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை ஸ்ருதி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதி சமூக வலைதளம் மூலமாக ஏராளமான இளைஞர்களிடமும் தொழிலதிபர்களிடமும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகனிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணம் வாங்கியுள்ளார். நடிகை ஸ்ருதியின் அழகிலும் அவருடைய ஆசை வார்த்தைகளிலும் மயங்கிய பாலமுருகன் ஸ்ருதி கேட்க்கும் பொழுதெல்லாம் பணம் […]
சீனாவில் தங்கல் படத்தின் முதல் நாள் வசூலை நடிகர் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் மிஞ்சியுள்ளது. பாகிஸ்தானிய சிறுமி இந்தியாவில் தொலைந்துபோனபோது, பல தடைகளைக் கடந்து இந்தியர் ஒருவர் அவரை பாகிஸ்தானில் உள்ள குடும்பத்தில் சேர்க்கும் கதையை மையப்படுத்தியது பஜ்ரங்கி பைஜான். இந்தியாவில் பஜ்ரங்கி பைஜான் வெளியாகி 30 மாதங்களுக்குப் பிறகு சீனாவில் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியாகும் சல்மான்கானின் முதல் படமான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 18 கோடி ரூபாய் வசூலித்து […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும்,அருள் நிதியுடன் டிமாண்டி காலணி,கக்கா முட்டை போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்.இவர் பிரபல தனியார் வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மி என்பவரை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இமைக்கா நொடிகள்’ படத்தின் பாடல் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . மேலும் இந்த படத்தில் அதர்வா – ராஷிகண்ணா காதல் ஜோடியாக நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் (Jennifer Lawrence, Jodie Foster) சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே அஃப்லெக்(casey affleck) தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவருக்குப் பதிலாக சிறந்த நடிகைகள் விருதை வழங்குவதற்கான பிரசெண்டர்களாக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டரை […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் தான் எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும். இப்போது அப்படத்தின் சண்டைகாட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட்ங்கில் உள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் மர்ம நபர்களால் […]
கார்த்தி கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் புதிய படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கும் […]
புதுப்படங்கள் வெளியீடு நிறுத்தப்பட்டு இருப்பதால், மீண்டும் ‘மெர்சல்’, ‘வேதாளம்’ போன்ற படங்களை திரையிட திரையரங்கு அதிபர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக எந்தவொரு படமுமே வெளியீடு இல்லை என்று அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு படத்தின் திரையிடலுக்கும் செலுத்தி வரும் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனத்திற்கான கட்டணத்தை இனி செலுத்தப் போவதில்லை. தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய சொந்த சர்வர்களை நிறுவிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் புதிய படங்கள் எதுவுமே வெளியீடு இல்லாததால், […]
ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேசுவரம் கடலில் கரைக்க ஏற்பாடு ராமேசுவரத்தில் ஸ்ரீதேவியின் அஸ்தி கரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகவும் அவர் திரும்பாததால் கணவர் போனி கபூரும் ஓட்டல் ஊழியர்களும் அவரை […]
தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் தனெக்கென தனி இடத்தையும், கோடிகணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளார். இருந்தும் பல இடங்களில் தனது எளிமையை அவ்வபோது காட்டிவருகிறார். இவருக்கு சஞ்சய் என்கிற மகனும், ஷாசா என்கிற மகளும் இருக்கின்றனர். ஷாசா தனது பள்ளியில் பேட்மிட்டன் விளையாடும் போட்டியை ஒரு ஓரமாக கண்டு ரசித்திருந்தார். அதனை ரசிகர் யாரோ போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது தற்போது வைராலாகி வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியில் வசனம் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் “வேங்கையன் மவன் ஒத்தையா நிக்கன், தில்லு இருந்தா மொத்தமா வாங்கல” என்னும் வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது சமூக வலைதளத்தில் மர்ம நபர்களால் காலா டீஸர் வெளியிடப்பட்டதால், படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காலா திரைப்படத்தின் டீஸரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.நெல்லை வட்டார பேச்சு வழக்கில் ரஜினியின் வசனம் வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. […]
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் உள்ள புதிய திரைப்படம் ‘காலா’. இப்படத்தின் டீஸர் மார்ச் 1 (நேற்று) வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்திருந்த நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார் மறைவை அடுத்து மார்ச் 2 (இன்று) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தனுஷ் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸர் இணையதளத்திலும், சமூகவலைதளத்திலும் வெளியாகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இந்த டீஸரில் வரும் ஒரு […]
நள்ளிரவில் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியானது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் காலா படத்தின் டீசர் காலை 10 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள். இதோ காலா படத்தின் மிரட்டலான டீசர் …..
இயக்குனரும், தயாரிப்பாளருமான பவித்திரன், தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு மாறாக நாளை தனது தாராவி படத்தை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். தாராவி என்ற தமது புதிய படத்தை திட்டமிட்டபடி நாளை தமிழகம் முழுவதும் உள்ள 150 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருப்பதாக பவித்திரன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல விஷால் நடத்ததுவதாக சாடியிருக்கும் பவித்திரன் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைகள் குறித்தும், விஷாலின் தன்னிச்சையான போக்கு […]
நாளை நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தின் டீசர் வெளியீடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது . ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள நடிகர் ரஜினியின் காலா படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலா டீசர் வெளியீட்டை ஒத்தி வைத்திருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட இருந்த காலா படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கம் , இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய தமிழ்த்திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளது. டிஜிட்டல் வடிவிலான திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்கக் கோரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். இந்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திட்டமிட்டபடியே இன்று முதல் எந்தப் படமும் வெளிவராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் […]
மும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல், துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி […]
தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற போராடி கொண்டிருக்கும் ஹீரோ பரத். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக காளிதாஸ் என்ற படம் ரெடியாகி வருகிறது. இதனை தொடர்ந்து பரத்தும், காமெடி நடிகர் சூரியும் இணைந்து நடிக்கும் திரைப்பபடம் ‘8’ (எட்டு) இப்படத்தை விஜய் கவிராஜ் என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பூஜா ஜவேரி என்பவர் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.ஜான் பீட்டர் இசைய. செவிலோராஜா ஒளிப்பதிவு […]
நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பன்முகம்கொண்ட திரைபிரபலம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் படங்களை ரசித்து எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கி நடித்து 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உள்ளே வெளியே. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நன்றாக ஓடியது. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார். இதில் நடிக்க போகும் நட்சத்திரங்களை தேடி வருவதாக கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க […]