மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிகர் சார்லி நடித்துள்ளார். படம் பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும் ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கி பழகிவிட்டேன். தனது மிக எளிமையான நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது எளிமையும் எங்களது நட்பும் படத்தில் எங்களது கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
தற்போதுள்ள ஹீரோக்களில் பிஸியாக நடித்து வரும் ஹீரோக்களுள் விஜய் சேதுபதியும் ஒருவர். அவரது அடுத்த படமான ’96’ படத்தில் விஜய் சேதுபதி வித்யாசமான 3 கெட்டப் நடிக்கிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம் இயக்கியுள்ளார். இவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழ் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விதிப்பது ஏன்? 15வது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் அரவிந்த் சாமி பேச்சு
சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது முகநூல் […]
வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் பிரவேசத்திற்காகவும் அடுத்தகட்ட நகர்விற்காகவும் வரும் டிச.26 முதல் 31ம் தேதி வரை சென்னையில் ரசிகர்களை சந்திக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இதனால் விரைவில் போர் முரசு கொட்டி போர் நடக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.எண்ணப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை.
“காங்கிரஸ் தனது கட்சித்தலைவர் தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தாதற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம், இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா தலைவராகியிருப்பார்…” என ஹிந்தி நடிகரும்,சமூக சேவகருமான நானா படேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்விட்டர் அடின்னா இப்படி இருக்கணும்… https://twitter.com/nanapatakarr/status/940610768025804805
தேர்தலில் விஷால் போட்டியிடுவது குறித்து, சங்க பொறுப்பாளர்களிடம் சொல்லவில்லை .சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது – பொன்வண்ணன். நடிகர் சங்கம் மீதான விமர்சனத்தை ஏற்று, பதவியில் தொடர விரும்பவில்லை
அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார் நடிகர் சங்கத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கனவே பதிவு செய்திருந்தோம் விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது -பொன்வண்ணன்
நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் போது, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம் என கூறி இருந்தோம் – நடிகர் பொன்வண்ணன். அரசியல் வேண்டாம் என சொல்லவில்லை.நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் விளக்கம்.விஷால் தேர்தலில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது. விஷால் தேர்தலில் நிற்பது தனிமனிதனின் உரிமை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த வருடம் காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் மற்றும் கௌசல்யா இருவரும் விடுமுறை தினத்தை முன்னிட்டு உடை மற்றும் பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது கௌசல்யா குடும்பத்தை சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பெயரில் சிலர் இருவரையும் கொலைவெறியுடன் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.இதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.இந்நிலையில் சங்கரின் கொலைக்கு நீதி கேட்டு பல மார்க்சிய,அம்பேத்காரிய,பெரியாரிய அமைப்புகள் கௌசல்யாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.சட்ட […]
சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் வந்து ஆஜராகுமாறு பிரபல திரைப்பட நடிகையும் ,இயக்குனர் விஜய்யின் முன்னாள் மனைவியுமான அமலா பாலுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் அவர் நேரில் ஆஜராகவில்லை எனில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கும் நிலையும் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். இவரது நடிப்பில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில படங்கள் என்றும் நமது மனதில் இடம் பிடித்தவைகளாக இருக்கும்.மேலும் அவருக்கு பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகராக உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் ,இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான விரேந்தர […]
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் தகவல்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் அறிவிப்பு வெளியிட திட்டம்.கட்சி உட்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பிறந்த நாளை முன்னிட்டு காலா திரைபடத்தின் 2ஆவது போஸ்டர் வெளியானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பும் ஒரு சினிமா நட்சதத்திரம் என்றால் அது ரஜினிகாந்த்தான். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடி மகிழ்கின்றனர். இது தர்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
சட்டவிரோதமாக புதிய படங்களை பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையத் தளங்கள் மீது முதல் முறையாக வழக்குப் பதிவு..!புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு
தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தளபதியின் மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியாகி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதேபோல் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கபாலி. இப்படமும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் ஓவர்சீஸில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனை செய்தது. இந்த இருபடங்களும் பொங்கலுக்கு தொலைகாட்சியில் மோத உள்ளன. கபாலி திரைப்படத்தை சன் டிவியும், […]
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பத்மாவதி படத்தை பற்றியும் முத்தலாக் பற்றியும் கேள்விகள் கேட்கபட்டிருந்தது. இது எம்.ஏ பட்டபடிப்பில் செமஸ்டர் தேர்வு தாளில் கேள்வி கேட்கபட்டிருந்தது. அதில், ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன் கல்கி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்க பட்டுள்ளது. அந்த கேள்விக்கு 10 மதிப்பெண்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் இதில், மூத்தலாக் குறித்த கேள்வியும் இடம் பெற்று உள்ளது. அந்த கேள்வியானது, முத்தலாக் குறித்து விவாதிக்கவும் எனக் வினாவபட்டுள்ளது. செமஸ்டர் […]