Saamy2 [File Image]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா, ஆகியோர் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமி. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. விக்ரம் இடம் இருந்து ரசிகர்கள் இந்த மாதிரி ஒரு கமர்ஷியல் படத்தை அந்த சமயம் எதிர்பார்க்கவே இல்லை என்று கூட கூறலாம்.
அந்த அளவிற்கு ஒரு தரமான கமர்ஷியல் படத்தை இயக்குனர் ஹரி விக்ரமை வைத்து கொடுத்திருப்பார். இந்த சாமி படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் ஹரி விக்ரமை வைத்து இயக்கினார். ஆனால், இந்த இரண்டாவது பாகத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவில்லை.
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள். ஆனால், இரண்டாவது பாகம் முதல் பாகத்தை போல இல்லாத காரணத்தால் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை. முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன காரணத்தால் இரண்டாவது பாகத்திற்கும் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், எதிர்பார்த்தது போல படம் இல்லாத காரணத்தால் படம் அட்டர் பிளாப் ஆனது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் (செப்டம்பர் 21) 5 வருடங்கள் ஆகியுள்ளது. 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தாலும் கூட உலகம் முழுவதும் 48 கோடி வரை வசூல் செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 28 கோடியும், ஆந்திரா & நிஜாம் 5.45 கோடி, கர்நாடகாவில் 2.9 கோடி வெளிநாடுகளில் 8.75 என மொத்தமாக இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 48 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…